Posted Mon Oct 28, 2013 2:04 pm
[You must be registered and logged in to see this image.]
கொங்கதேசம் எல்லைகளுடன்:
குளிர்ந்தநதி பன்னிரெண்டு:
1.ஆன்பொருநை (ஆம்ராந்து, ஆம்பிராநதி, அமராவதி),
2.காஞ்சி (நொய்யல்),
3.வானி (வவ்வானி, பவானி),
4.பொன்னி (காவேரி),
5.சண்முகநதி,
6.குடவனாறு (கொடவனாறு),
7.நன்காஞ்சி (நங்காஞ்சி, நஞ்சங்கையாறு),
8.மணிமுத்தாறு (திருமணிமுத்தாறு)
9.மீன்கொல்லிநதி
10.சரபங்கநதி
11. உப்பாறு
12. பாலாறு
சங்கரனார் தெய்வத்தலம் ஏழு - கொங்கேழ் சிவஸ்தலங்கள்
1.கருவூர் [கரூர்],
2.வெஞ்சமாக்கூடல்,
3.திருச்செங்கோடு,
4.திருநணா [வவ்வானி - பவானி],
5.கொடுமுடி,
6.திருமுருகன்பூண்டி,
7.திருப்புக்கொளியூர் [அவினாசி])
வஞ்சிநகர் நாலு:
1.கருவூர்,
2. தாராபுரம்,
3.மூலனூர்,
4.விளங்கில்

பாரதவர்ஷத்தில் ஐம்பத்தியாறு தேசங்கள் உள்ளன. தேசம் என்பது socio-climatic unit ஐக்குறிக்கும். இயற்கை அரண்கள் ஒவ்வொரு தேசத்துக்கும் எல்லைகளாக உள்ளன. சேர அல்லது கொங்க தேசத்துக்கும் மலைசூழ்ந்த எல்லைகள் உள்ளன. இவ்வெல்லைகளுள் micro – socioclimatic unit களும் உள்ளன. இவை நாடுகள் என்று வழங்கப்படுகின்றன. அன்னியர்களால் அன்னியமுறையில் அமைக்கப்பட்ட இன்றைய சர்க்கார் AC அறையில் அமர்ந்துகொண்டு தாந்தோன்றித்தனமாக இவற்றைப் பிரித்திருப்பினும், இயற்கை, பண்பாடு, வாழ்க்கைமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நாட்டுப்பிரிவுகள் என்றும் நமது வாழ்க்கையின் வழியாக உள்ளன. நிலையான அமைதியான வாழ்வு (இதனையே சனாதன தர்மம் என்றும் sustainable living என்றும் ஆழைத்து வந்துள்ளோம்) இருந்திட இம்முறை பல்லாயிரம் வருட பரிணாம வளர்ச்சிக்குப்பின் உருவானதாகும். நீர் நிலைகள் பராமரிப்பு (அணைக்கட்டு – உதாரணம் நொய்யல், அமராவதி, பவானி, திருமணிமுத்தாறு, காவேரி அணைகள் போன்றவை, ஏரிகள் – உதாரணம் பூந்துறை, வெள்ளோடு, ந்சியனூர், எழுமாத்தூர் ஏரிகள் முதலியவை, குளங்கள், குட்டைகள், வாய்க்கால்கள் – காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, இருட்டணை முதலானவை, கிணறுகள், தீர்த்தங்கள், தெப்பக்குளங்கள் – ஈரோடு, பெருந்துறை தெப்பக்குளங்கள் போன்றவை - , தடாகங்கள்) முதலியவை , பண்பாட்டினைப் பாதுகாத்தல் (தர்மங்கள்,சமுதாய கூட்டுக்குடும்ப அமைப்புகள், கலைகள், இலக்கியங்கள், கோயில், மடம், சத்திரங்களைப் பாதுகாத்தல், மரங்கள் நடுதல், கால்நடைகள், நாட்டு வித்துக்கள் தயார் செய்தல்) - .
கொங்கதேசத்தினை 24 நாடுகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு நாட்டிற்கும் பிராமணர்களிலிருந்து சாம்புவன் வரை 18 குடிகள் உள்ளனர். ஒவ்வொரு குடிக்கும் தனித்தனியே ஊர்த்தலைவர்கள் முதல் பட்டக்காரர்கள் வரை உண்டு. இவர்கள் தத்தமாது குடிகளைக் கட்டிக்காத்து வந்துள்ளனர். இதற்கு ஜாதிப்பஞ்சாயம், சமிதி அல்லது ஆயம் என்று பெயர். இவர்களுக்கு மேல் ஒவ்வொரு நாட்டிற்கும் பெரிய வீட்டுக்காரர், நாட்டுக்கவுண்டர், பட்டக்காரர், நாட்டார், காராளர், எஜமானர் என்று அழைக்கப்படும் நாட்டுப் பட்டக்காரர்கள் இருந்து வந்துள்ளனர். இப்பெயர்கள் அனைத்தும் ஒரே பொருளையே குறிக்கின்றன. இவர்கள் சபை (மன்றம்) நடத்தி வந்தனர். இதனால் மன்றாடி (மன்றம் + ஆடி) என்று பெயர் பெற்றனர். இவர்கள் நாட்டு சபைக்கும், அனைத்து ஆயங்களுக்கும் தலைவர்கள். இது நிர்வாக அமைப்பாகும். துருக்கர் காலத்தில் இதனை நேரடியாக அழிக்க முயன்று தோற்றனர். பிறகு கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் இதனை அழித்தாலோ, கைபற்றினாலோதான் கொள்ளையடிக்க முடியும் என்பதனைப் புரிந்துகொண்டு இன்று வரையில் வெவ்வேறு வழிகளில் சுதேசி ஆட்சிமுறைகளை இன்றுவரை அரித்தெடுத்து வருகின்றனர்.
நாட்டார்கள் புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, தீயன பேசாதிருத்தல், அறுபத்திநான்கு கலைஞத்துவம், பெண்களுக்கு சம உரிமைகள் (குதிரையேறுதல், மன்றம் – சபை நாட்டாண்மை முதலியவை), குருபக்தி, தெய்வபக்தி போன்ற தனித்தன்மையுடன் உள்ளனர். இவை இவர்களை காணியாள, குடியான கவுண்டர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
குறிப்பு: இது துருக்கர்களால் ஏற்படுத்தப்பட்ட ஜமீன்தார், தாசில்தார், மன்சப்தார், தாலுக்தார், இனாம்தார் முறைகளல்ல,
விஜயநகரத்தாரால் ஏற்படுத்தப்பட்ட பாளையக்காரர் முறையுமல்ல,
வெள்ளையர்காளால் மாற்றியமைக்கப்பட்ட பாளைய பட்டக்காரர் முறையுமல்ல (feudal lords).
ஆதியில் சேரமான் ஏற்படுத்திய சங்ககால முறை. கடைசி சேரலான உலாச்சேரல் (சேரமான் பெருமாள் நாயனார்) கைலை செல்லும் முன் தன் கீழ் பெரிய பட்டமான பூந்துறை நன்னாவுடையார் வம்சத்தினரான வேலப்ப நயினான் என்பவரை கொங்க தேசத்திற்கும் அதன் கீழிருந்த கர்னாட தேசம், மலையாள தேசம், கேரள தேசம் ஆகிய தேசங்களுக்கும் தான் வரும்வரை அதிகாரியாக திருவாஞ்சைக்களத்தில் நியமித்துச் சென்றதாக வரலாறு.
இன்றும் சேரமானது வாரிசுகள் தாராபுரத்தில் உள்ள வஞ்சியம்மன் கோயில் பூஜை முறைகளைச் செய்து வருகின்றனர்.