Posted Sun Jan 12, 2014 3:33 pm
[You must be registered and logged in to see this image.]
cfe91acd-a7bf-47a8-806a-2d399f359021_S_secvpfநாயகன் அன்சர் கல்லூரி படிப்பில் 2 பாடங்களில் பெயில் ஆகியுள்ளார். அதை முடிக்க முயற்சி செய்யாத அவர், எந்த வேலைக்கும் போகாமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வருகிறார். இவருடைய தம்பி ஆனந்த். இவர் அன்சருக்கு நேர்மறையானவர்.
படித்து முடித்து விட்டு வேலைக்கு செல்கிறார். ஆனந்த் தன் நண்பன் முரளியின் தங்கை சங்கவியை காதலித்து வருகிறார். இவர்களின் அப்பா ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை செய்து வருகிறார். அன்சருக்கு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவன் நண்பனிடம் கேட்பான். அவன் நண்பனோ வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுபவன்.
அன்சரின் அப்பா வேலை செய்யும் பள்ளிக்கூடத்திற்கு நட்சத்திரா ஆசிரியர் வேலைக்கு சேருகிறார். வேறொரு ஊரில் இருந்து வேலைக்கு சேரும் இவருக்கு தங்க இடமில்லாத்தால், அன்சரின் அப்பா நீ வேறு வீடு பார்க்கும் வரை என் வீட்டில் தங்கிக்கொள் என்று கூறி வீட்டிற்கு அழைத்து வருகிறார். தன் மகன் அன்சரிடம் கூறி வீட்டில் தங்க வைக்கிறார். நட்சத்திரா மீது எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் இருந்து வருகிறார் அன்சர்.
ஒரு நாள் தன் தம்பியுடன் வெளியில் செல்லும்போது கடன்காரன் ஒருவன் அன்சரிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடு என்று கேட்கிறார். அதற்கு அவர் இரண்டு நாட்களில் தருகிறேன் என்று கூறி அனுப்பி வைக்கிறார்.
தம்பி முன் காசு கேட்டதால் மிகவும் வருத்தமடைகிறார். அன்சருக்கு எப்போதும் காசு கொடுக்கும் நண்பன் ஊரில் இல்லாதது அவருக்கு பெரும் வருத்தம். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் ரோட்டில் தனியாக செல்லும் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டு அந்த கடனை அடைக்கிறார்.
ஒரு வழியாக கடன் பிரச்சினை முடிந்த பிறகு ஒரு நாள் வீட்டில் தனியாக இருக்கும் நட்சத்திரா மீது அன்சரின் கவனம் செல்கிறது. அவளிடம் பேச முயற்சி செய்கிறார். ஆனால் அதற்கு முன் நட்சத்திரா அவரிடம் பேசி விடுகிறார்.
இந்நிலையில் ஒருநாள் அன்சர் வெளியில் செல்லும்போது அவருடன் பழக வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விடும்படி கூறுகிறார்.
பைக்கில் செல்லும்போது நட்சத்திரா வெளியில் எங்கேயாவது போலாமா என்று கேட்க, இருவரும் மலை உச்சிக்கு செல்கிறார்கள். அங்கு அன்சருக்கு பிறந்தநாள் கேக் வெட்டி இருவரும் கொண்டாடுகிறார்கள். அங்கு உனக்கு நான் இருக்கிறேன் நீ எதற்கும் பயப்பட வேண்டாம் என்று நட்சத்திரா கையை பிடித்து அன்சர் சொல்லிவிடுகிறார்.
வீட்டிற்கு வரும் இவர்கள் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், இரண்டறக் கலந்து விடுகிறார்கள். இதுவரை நட்சத்திராவை பற்றி எதுவும் தெரியாத அன்சர், அவள் தன்னை விட பெரியவள் என்று தெரிந்து கொள்கிறான். இவளின் கட்டளைப்படி படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார்.
ஒருநாள் நட்சத்திரா தன் ஊருக்கு செல்ல, அன்சரின் அப்பா தன் மகன் படிப்பில் கவனம் செலுத்துகிறான், இவன் மாறி விட்டான் என்று அன்சரின் மாமா மகளுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவெடுக்கிறார்கள்.
இறுதியில் அன்சர், தன்னை விட பெரிய பெண்ணான நட்சத்திராவை மணந்தாரா? இல்லை மாமா மகளை திருமணம் செய்தாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் அன்சர் நாயகி நட்சத்திரா இருவரும் நடிப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். தம்பியாக வரும் ஆனந்த், மற்றும் சங்கவி ஆகியோர் அவர்களுக்கு கொடுத்த வாய்ப்பை ஓரளவுக்கு சரியாக செய்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கலாம்.
சதீஷ் ஒளிப்பதிவில் மலைகளை அழகாக காட்சியளித்திருக்கிறார். படம் முழுக்க கதாபாத்திரங்கள் வசனம் பேசாமலே ‘மைண்டு வாய்ஸ்’ மூலம் பேசுவது, டீக்கடை வைத்துக்கொண்டு காமெடி என்னும் பெயரில் கடிப்பது, நீண்ட காட்சிகள் என அனைத்திலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் இயக்குனர் தேவேந்திரன்.
யுதா ஷாலோம் இசையில் ஒரு பாடல் கேட்கும்படியாக இருப்பினும், இசைக்கு அவ்வளவாக முக்கியத்தும் இல்லை. திரைக்கதை, வசனத்தையும் எழுதியுள்ள இவர், படத்தில் சொல்ல வருவதை கொஞ்சம் தெளிவாக சொல்லியிருந்தால் கூடுதல் ரசிகர்களை அள்ளியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘முன் அந்தி சாரல்’ சுகம் இல்லை.