Posted Sat Jan 11, 2014 10:42 pm
எப்பொழுது மூட்டை வர வர ஏறிக்கொண்டே இருக்கிறது. நாம் பூலோகத்தில் வந்துவிட்டோம். இனி, யாராக இருந்தாலும் போயாக வேண்டும். இதுவரை இந்த லோகமானது அழுக்கை ஏற்றிக்கொள்வதற்கே இடமாக இருந்துவிட்டது.
இப்படி இருந்த போதும், இனிமேல் இது அழுக்கை அலம்புகிற இடம் என்று ஆக்கிக்கொள்வோம். தேஹம், மனசு, சாஸ்திரம், ஷேத்திரம், தீர்த்தம் முதலிய பல சௌகரியங்கள் இந்த உலகில்தான் இருக்கின்றன. நாம் வாக்கினாலும் மனதினாலும் கைகால் முதலியவற்றாலும் பாவம் செய்திருக்கிறோம்.
அந்தப் பாவங்களை எல்லாம் வாக்கையும், மனசையும், அவயவங்களையும் கொண்டே புண்ணியம் செய்து கரைத்துவிட வேண்டும். நாம் இந்த உலகை விட்டுப் போவதற்கு முன் “பாவ மூட்டை இல்லை’ என்று சொல்லும்படி செய்துகொண்டால் அப்புறம் பஞ்சைப் போல் ஆனந்தமாக பறந்து போகலாம்.
- காஞ்சி மகாபெரியவர்