Posted Fri Oct 25, 2013 11:11 pm
“என்ன... ஒரு மாதிரியா வர்றீங்க?”
“நான் ஒரு பைத்தியம்.. என் வீட்டுக்காரி சொல்றா...!”
“எங்க வீட்டுலேயும் எனக்கு அப்படித்தான் பேரு..! அதுக்காக நான் கவலைப்படறேனா..? விட்டுத் தள்ளுங்க சார்.. வீட்டுக்கு வீடு இதெல்லாம்
சகஜம்!”
“என்ன இப்படிச் சொல்றீங்க!”
“வேறே எப்படிச் சொல்லச் சொல்றீங்க..? உங்களுக்குத் தெரியுமா.. ஒரு புள்ளி விவரம்...?
“என்னது..!”
“நம்ம நாட்டுலே 26 சதவீதம்பேர் மனநிலை பாதிப்புக்கு ஆளானவங்கத்தானாம்! பல்வேறு காரணங்களாலே இப்படி ஆயிடறாங்களாம்..!”
“யாரு சொல்றது இப்படி?”
“இந்திய மனநல மருத்துவர்கள் சங்க மாநாட்டுலேயே இந்தக் கருத்தைத் தெரிவிச்சிருக்காங்க!”
“வேடிக்கையாத்தான் இருக்கு!”
“அது மட்டுமில்லே... அலெக்சாண்டர், ஹிட்லர், நெப்போலியன்,... இவங்கள்லாம்கூட ஒவ்வொரு கால கட்டத்துலே மனநிலை பிறழ்ந்தவங்களாதான் இருந்திருக்காங்க!”
“நீங்க சொல்றதெல்லாம் நியாயம்தான் சார்... ஆனாலும் நான் எப்பேர்ப்பட்ட ஆள்? எல்லா விஷயத்துலேயும் எவ்வளவு தெளிவா இருக்கிறவன்.. என்னைப்போய் இப்படிச் சொல்றாளே.. அதுதான் மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு!”
“அவங்க அப்படி சொல்ற அளவுக்கு நீங்க நடந்திருப்பீங்க...!”
“வேறே ஒண்ணுமில்லீங்க.. எனக்கு பச்சைக் கலர் செருப்புதான் வேணும்.. கருப்புக் கலர் செருப்பு வேணாம்னு சொன்னேன். அது ஒரு தப்பா..?”
“அதுலே ஒண்ணும் தப்பு இல்லையே... எனக்குக் கூடப் பச்சைக் கலர் செருப்புதான் பிடிக்கும்...!”
“பார்த்தீங்களா..! இப்ப சொல்லுங்க.. நீங்க எப்படி.. அதைப் பொரிச்சி சாப்பிடுவீங்களா? இல்லே வேகவச்சி சாப்பிடுவீங்களா?”
நன்றி : தென்கச்சி சுவாமிநாதன்