Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

படித்ததில் பிடித்தது..

Message (Page 1 of 1)

#1

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Sat Aug 03, 2013 9:42 am

 

படித்ததில் பிடித்தது..

அன்பர்களே! படித்ததில் பிடித்த கவிதைகள், சொற்றொடர்கள், பதிவுகளை இங்கே பதிவு செய்யுங்களேன்!

நன்றி.



https://tamil.forumotion.com


#2

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Mon Oct 07, 2013 4:38 pm

 

ஒரு ஊரில் எலித்தொல்லை. அதைப்
பார்த்த ராஜா, ''ஒரு செத்த
எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய்
தரப்படும்,''என்று அறிவித்தார்.
மக்களும் நிறைய எலிகளைக்
கொன்று பையில்
போட்டு அரண்மனையில் கொடுத்துப்
பணம் பெற்றுச்சென்றனர்.
அரண்மனை துர்நாற்றம் எடுக்க
ஆரம்பித்தது. அரசன் உடனே செத்த
எலியின் வாலைக் கொண்டு வந்தால்
போதும் என்று அறிவித்தார். வாலைக்
கொண்டு வந்து பரிசு வாங்கும்
மக்களின் எண்ணக்கை நாளுக்கு நாள்
கூடிக் கொண்டே இருந்தது. அனால்
எலித்தொல்லை குறையவில்லை.
இது பற்றி அரசன் தீவிரமாக
விசாரித்ததில் தெரிய வந்தது;
பணம்
கிடைக்குமே என்று மக்களே வீட்டில்
எலி வளர்க்க
ஆரம்பித்து விட்டார்கள்!
********************************************
இலவசங்கள் வழங்குவதால் மக்கள்
பிரச்சினைகள்
தீர்ந்து விடாது.வேறு உருவத்தில்.
உருவெடுக்கும் ..


thanks Kongu Vignesh.....



https://tamil.forumotion.com


#3

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Mon Oct 14, 2013 4:43 pm

 
A short and sweet story

once there was a 13 year boy, very careless and naughty.
He was shy also. He didn't talk to any girl of his class. Girls didn't like dat boy.
He was very week at his studies.
There was a cute n intelligent girl in his class.she saw dat boy.....alone and unhappy.
She felt sorry for dat poor boy.
She wanted to talk wid him & made an effort to talk to him. After a few effort she was friend wid him. Now they both were happy. She helped him in his studies. The boy could pass only because of that girl.
Both used to share everything. They were best friends now.
The boy got care n love in her friendship.

But unfortunate was d boy. Soon he began to quarrel at small things
the girl said "I'll leave u sumday, n u'll mis me". Bt he nevr undrstud.

1 day he was left alone and unhappy again.

The girl left him.

He realised her importance when there was no one to care for him.

Now he missed her very much.

After a long tym he met her and said sorry for everything.
She was a kind hearted girl. Excused him.

But now she was changed.
Time was changed....
There were so many people in her life who respect her, Who cares for her and who understand her value.

The girl whom dat boy knew was now only in his memories.....

Friends, it was d story which teaches us a very gud lesson..

"never ignore or never let go that person from ur life, who cares for u.
Maybe sumday u realìse, dat u have lost a diomand while u were busy in collecting stones."

Time never come back.

Thanks Sky blue



https://tamil.forumotion.com


#4

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Thu Oct 24, 2013 7:00 pm

 
நாம் எடுத்துக்கொள்வதுதான் வாழ்க்கை. எப்போதும் அது அபபடித்தான் இருந்தது, இருக்கும். வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி தராது. அதை மகிழ்ச்சியா வைத்துருக்க நாமும் விரும்ப வேண்டும். வாழ்க்கை உனக்கு நேரமும் இடமும் மட்டும் தரும். நிரப்ப வேண்டியது உன் சாமர்த்தியம்



https://tamil.forumotion.com


#5

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Thu Oct 24, 2013 7:02 pm

 
"அம்மா!"
வலியினையும் பாராமல் பத்துத் திங்கள் என்னைதன்
கருவறையில் சுமந்தவள் அம்மா!

ஆராரோ ஆரிரோ பாடித் தூங்கச் செய்தவள் அம்மா!

குயவன்போல் என்னை அழகுபடுத்த முனைந்திடுவாள் அம்மா!

தன் இரத்தத்தினைப் பாலாகப் பாசத்துடன் ஊட்டுபவள் அம்மா!

பாலுடன் அன்பு, பாசம், பரிவினையும்சேர்த்து ஊட்டுபவள் அம்மா!

தன் உயிரிலும் மேலாக என்னைக் காத்திடுபவள் அம்மா!

தன் குழந்தையின் புன்சிரிப்பினைக் கண்டு பூரித்திடுபவள் அம்மா!

கதைகள், பாட்டுக்கள் பாடி குழந்தையினை அறிவாளியாக்கிடுவாள் அம்மா!

தன் குழந்தை உலகம் போற்ற வளர்ந்திட தன் உயிரினையும் கொடுத்திடுவாள் அம்மா!

கல்லறை சென்ற பின்னும்
கருவறையில் சுமந்தவனை நினைத்திடுபவள் அம்மா!


"அப்பா"
அம்மா சொல்லித்தந்த முதல் வார்த்தை அப்பா!
தோள்தனில் சுமந்து உலகம் காட்டியவர் அப்பா!
பாசம் தந்து பண்புடையவனாய் வளர்த்தவர் அப்பா!
தன் மூச்சினில் என்னைச் சுமந்து வளர்த்தவர் அப்பா!
கல்விதனில் சிறந்து விளங்கிட தன் உழைப்பினைத் தந்தவர் அப்பா!
உலகம் போற்றிட நான் சொல்வேன் அப்பாவின் புகழ்!



https://tamil.forumotion.com


#6

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Fri Oct 25, 2013 8:35 pm

 
[You must be registered and logged in to see this image.]

அன்புள்ள மகனுக்கு,
அப்பா எழுதுவது
நான் இந்தக் கடிதத்தை எழுதுவதற்கான காரணங்கள் மூன்று.

வாழ்க்கை, வாய்ப்புகள்,துரதிர்ஷ்டம் முதலானவற்றை யாராலும் முன்கூட்டியே அறியமுடியாது.வாழ்க்கை கால அளவு எவ்வளவு என்பதும் நமக்கு தெரியாது.சில விஷயங்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்திலேயே சொல்லி விடுவது நல்லது
நான் உனக்கு அப்பதானே! நான் சொல்லிக் கொடுக்காமல் வேறு யார் சொல்லிக் கொடுப்பார்கள்?
நான் சொல்லி இருக்கும் விஷயங்கள் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்குப் பிறகு தெரிந்து கொண்டவை. இவற்றை நீ அனுபவித்து தெரிந்து கொள்வதை விட எனது அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்வது கால,பொருள் விரயங்களை தவிர்க்கும் அல்லவா?

நான் சொல்லப் போகும் விஷயங்களை உன் மனதில் பதிய வைத்துக் கொள்வதும் விட்டுவிடுவதும் உன் கையில்தான் இருக்கிறது.

எல்லோரும் உன்னிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்க வேண்டாம். மரியாதை இன்றி நடந்து கொள்பவர்களைப் பற்றி புலம்புவதில் பயனில்லை. உண்மையில் உன்னை மரியாதையாக நடத்த வேண்டிய பொறுப்பு எனக்கும் உனது அம்மாவுக்கு மட்டுமே தவிர வேறு யாருக்கும் இல்லை உன்னிடம் நல்லவிதத்தில் நடந்து கொள்பவர்களிடம் நீ நல்ல உறவு வைத்துக் கொள்ளவேண்டும்.அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கவேண்டும்.அதே நேரத்தில் எச்சரிக்கையும் தேவை.ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் செயலுக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். உன்னிடம் நல்லவிதமாக நடந்து கொள்பவர்கள் எல்லாம் உன்னை நேசிப்பவர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
இந்த மனிதர்தான் வேண்டும். இந்தப் பொருள்தான் வேண்டும். இவை இல்லை என்றால் வாழ்க்கையே முழுகிப் போய்விடும் என்றெல்லாம் இந்த உலகத்தில் ஒன்றும் கிடையாது.நீ நேசிக்கும் நபரோ அல்லது பொருளோ உன்னை விட்டுப் போய்விட்டாலும் உண்மையில் எந்த பாதிப்பும் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் எந்த இழப்பையும் எளிதில் தாங்கிக் கொள்ள முடியும்.
மனித வாழ்க்கை மிகவும் சிறியது. ஒவ்வொரு நாளும் ஒரு பொக்கிஷம் போன்றது. நிகழ்காலத்தில் வாழ்கையை வீணடித்தால் எதிர்காலத்தில் வாழ்க்கை உன்னை விட்டு விலகி சென்றிருக்கும்.
அன்பு என்பது உண்மையில் நல்ல விஷயம்தான்.ஆனால் அது நிலையானது அல்ல. சூழ்நிலயைப் பொறுத்து அது அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும்.காதல் புனிதமானது இனிமையானது,அழகானது, தெய்வீகமானது என்றெல்லாம் பேசித் திரியாதே! இதெல்லாம் எல்லா பெற்றோரும் சொல்வதுதானே என்று நீ நினைக்கலாம். ஆனால் இவற்றால் என்றாவது நீ மனமுடைந்து போக நேரக் கூடிய சூழல் வந்தால் அந்த சோகத்தை தவிர்க்கவே இதைக் கூறுகிறேன். அதனால்தான் அவற்றை மிகைப் படுத்த வேண்டிய அவசியம்இல்லை என்றும் வலியுறுத்துகிறேன்.
வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களில் பலர் அதிகம் படிக்காதவர்கள்.கஷ்டப்பட்டு படிக்க வேண்டாம் என்பது இதற்கு அர்த்தம் அல்ல.வாழ்க்கைக்கு முக்கியமானது கல்வி. அதே நேரத்தில் படிப்பறிவு மட்டுமே வாழ்க்கைக்கு போதாது என்பதை புரிந்து கொள்
கந்தை உடுத்துபவன் பணக்காரன் ஆக முடியாதா என்ன? நிச்சயம் முடியும் ஆனால் கந்தைத் துணியுடன்தான் தனது பயணத்தை தொடங்க வேண்டும் வேறு வழியில்லை.
என்னை வயதான காலத்தில் நீ தாங்குவாய் என்று நான் நிச்சயம் எதிர் பார்க்கவில்லை.அது போலவே உன்னையும் வாழ்நாள் முழுதும் என்னால் தாங்கிக் கொண்டே இருக்க முடியாது என்பதை நீ உணர வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலம் வரையே உன்னை பராமரிக்க முடியம். உனது உழைப்பும் முயற்சியுமே உன் எதிர் காலத்தை நிர்ணயம் செய்யும்
மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை ஒரு போதும் மீறாதே. அதே நேரத்தில் மற்றவர்கள் உனக்கு கொடுத்த வாக்கை கடைபிடித்தே தீர வேண்டும் என்று எதிர்பார்க்காதே! நீ மற்றவர்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்வது உன்னை மட்டுமே பொறுத்த விஷயம். நீ நிச்சயம் அவ்வாறு நடந்து கொள்ள முடியும்.
அதிர்ஷ்டத்தை நம்பாதே இந்த உலகில் இலவசம் என்று ஒன்று கிடையாது.அதற்கான விலையை கொடுத்துத்தான் வேண்டும்.
புற விசை ஒன்று தாக்காதவரை ஒரு பொருள் அதே நிலையில் இருக்கும். இது நியூட்டனின் விதி. வாழ்க்கையும் அப்படித்தான் ஏதோ ஒரு புற நிகழ்வு வாழ்க்கைப் பயணத்தை மாற்றி அமைத்து விடுகிறது. அந்தப் புறநிகழ்வு நடக்கும்போது அதை பயன்படுத்திக் கொள். இல்லையெனில் சாதாரண மனிதனைப் போல பயணமோ நிலைப்போ அப்படியே இருக்கும்.
நான் உன்னுடன் செலவிடும் நேரம் போதுமானதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அது எவ்வளவு நேரமாக இருந்தாலும் நம் இருவருக்கும் அது மிகமுக்கியமானது. நாம் அடுத்த முறை சேர்ந்து இருப்போம் என்று சொல்ல முடியாது காரணம் வாழ்க்கை அவ்வளவு தூரம் நிலை இல்லாதது. அதை கவனத்தில் கொள்வாய் என் கண்மணி!

இப்படிக்கு
உன் அன்பு அப்பா



https://tamil.forumotion.com


#7

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Mon Oct 28, 2013 3:09 pm

 
கிராமங்களில் கிழிந்தபாவாடை -ஏழ்மையின் அறிகுறி!

நகரத்தில் கிழிந்த பாவாடை - வசதியின்அறிகுறி

வினோத உலகம்



https://tamil.forumotion.com


#8

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Mon Jul 07, 2014 9:19 am

 
[You must be registered and logged in to see this image.]

நம் மனமும் இக்கதையைப் போலதான்!

கோவணம்!

எல்லாவற்றையும் துறந்து விடு என்று ஒரு குரு சொல்லக் கேட்டு ஒரு சிஷ்யன் ஒரே ஒரு தவிர்க்க முடியாத கோவணத்துடன் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்தான். அந்தக் கோவணத்தை அடிக்கடி எலி கடித்து விட்டது. ஊரார் என்ன இது? இவ்வாறு கந்தலாகக் கோவணம் கட்டியிருக்கிறாயே என்று கேட்க "எலி கடித்து விட்டது" என்று பதில் சொன்னான் அவன்.

ஊரார், "அந்த எலியிடமிருந்து பாதுகாப்பிற்காக ஒரே ஒரு பூனை வளர்க்கலாமே?" என்றார்கள். அவன் பூனை வளர்க்கத் தொடங்கினான். பூனைக்குப் பால் தேவையாக இருந்தது. இல்லாவிடில் அது எலியைக் கடிக்க மறுத்தது. பாலுக்காக ஊரில் பிச்சை எடுக்க ஆரம்பித்தான். ஊரார், "ஒரே ஒரு பசுமாடு தருகிறோம். தினம் தினம் இங்கே வராதே" என்று பசு மாட்டைத் தானமாக அளித்தார்கள். மாடு வந்தது. புல் தேவையாக இருந்தது. புல்லுக்காக தினம் ஊருக்குச் செல்ல ஆரம்பித்தான். இதற்காகவா இங்கு வருகிறாய், ஒரு கால் ஏக்கரா நிலம் வைத்துக்கொண்டு புல் பயிரிடேன் என்று புறம்போக்காக இருந்த நிலத்தைக் கொடுத்தார்கள்.

நிலத்துக்கு வேலி, பால் கறக்க ஒரு இடையன், அவனுக்குச் சோறு, அதற்காகக் குடும்பம். என்று குரு சிஷ்யனை வந்து பார்த்த போது அவனைச் சுற்றி ஒரு பண்ணையே செழித்திருந்தது. இதைப் பார்த்த குரு, "மனைவி, மக்கள், சுற்றம், ஆட்கள், நிலம், மாடு, மனை என்று எல்லாம் சேர்ந்து விட்டாயே எப்படி?" என வினவினார். "சுவாமி எல்லாம் இந்த ஒரு கோவணத்துக்காக... " என்றான் அவன்.



https://tamil.forumotion.com


#9

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Mon Jul 07, 2014 9:29 am

 
[You must be registered and logged in to see this image.]



https://tamil.forumotion.com


#10

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Mon Jul 07, 2014 7:59 pm

 
[You must be registered and logged in to see this image.]



https://tamil.forumotion.com


#11

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Thu Jul 10, 2014 8:38 pm

 
ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார்.
ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.அப்போது
செருப்பு பிஞ்சுபோச்சு. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.
அந்த வீட்டுக்காரரை அழைத்து,
"ஐயா... இந்தமாதிரி வரும்போது என் செருப்பு பிஞ்சுபோச்சு. புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்... காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும்" என்றார்.
அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து,
"ஐயா.. நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான். நீங்க தாராளமா வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.
சில ஆண்டுகள் கடந்தன...
ஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார். அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது. அப்போது நல்ல மழை.
பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று,
"ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச் செல்ல முடியவில்லை. அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு. பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா?" என்று கேட்டனர்.
அந்த வீட்டுக்காரர் சொன்னார்,
"ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க”
உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரை தாங்க மனுசனுக்கு மரியாதை



https://tamil.forumotion.com


#12

Sponsored content


 

Posted

 





Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None