Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் !

Message (Page 1 of 1)

#1

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Sat Jan 11, 2014 11:16 pm

 
[You must be registered and logged in to see this image.]

கச்சிராயபாளையம்: சேராப்பட்டு மலைவாழ் மாணவர் விடுதி
வளாகத்தில் உள்ள, வெள்ளை நிற காகத்தை, பொதுமக்கள்
ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
-
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே, கல்வராயன் மலை,
சேராப்பட்டு கிராமத்தில், கிறிஸ்துவ தேவாலயம் உள்ளது.
இந்த வளாகத்தில், மாணவ, மாணவியர் விடுதி மற்றும்
குடியிருப்புகள் உள்ளன.

இங்குள்ள மரங்களில், காகங்கள் கூடு கட்டி வாழ்கின்றன;
ஒரு கூட்டில் இருந்த, காக்கை குஞ்சு வெள்ளை நிறத்தில்
இருந்ததால், மற்ற காகங்கள், அதை விரட்டின. இதனால்,
வெள்ளை நிற காகம், அங்குள்ள வேப்ப மரத்தில் தனியே
கூடு கட்டி வாழ்கிறது.

இதையறிந்த, அப்பகுதி மக்கள், ஆர்வத்துடன் காகத்தைப்
பார்த்துச் செல்கின்றனர். ‘

டி.என்.ஏ., குறைபாட்டால் ஏற்படும், ‘அல்பினீசம்’ நோயால்,
உடலில் நிறம் மாறும்; இதனால், தோலில் நிறங்களை
உருவாக்கும், ‘மெலனின்’ குறைபாடு ஏற்படும்.
இது, மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என,
அனைத்து உயிரினங்களிலும் தோன்றும்’ என, மருத்துவர்கள்
கருத்து தெரிவிக்கின்றனர்.

நன்றி தினமலர்



https://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None