Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

வாழ்க்கைக்கான பொன்னான வழிமுறைகள்...

Message (Page 1 of 1)

#1

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Thu Oct 24, 2013 6:22 pm

 

*
POPULAR

* எந்த பிரச்சனைகளை உங்களால் மாற்ற முடியாதோ அதனைப் பற்றி சிந்தித்து கவலைப்படாதீர்கள். காலம் பொன் போன்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* இந்த உலகம் என்னும் விசாலமான நாடகத்தில் நாம் அனைவரும் நடிகர்கள். அவரவரது பாகத்தை சரியாக நடித்துக்கொண்டிருக்கின்றோம். எனவே பிறரது நடிப்பைப் பார்த்து கவலைப்பட வேண்டாம்.

* பிறரை மாற்ற வேண்டும் என்ற இச்சையின் மூலம் மானசீக மன இறுக்கம் அதிகரிக்கின்றது. முதலில் தன்னை மாற்றிக் கொள்ளும் இலட்சியம் வைப்பதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

* பொறாமைப் படுவதனால் மனமானது எரிகின்றது. ஆனால் ஈஸ்வரிய சிந்தனை செய்வதன் மூலம் மனம் அளவற்ற குளிர்ச்சியை அனுபவம் செய்கின்றது.

* மகிழ்ச்சி கொடுப்பதன் மூலமே மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆகையால் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் முயற்சி செய்யுங்கள். ஒருபொழுதும் யாருக்கும் துக்கம் கொடுக்கும் சிந்தனையே செய்யாதீர்கள்.

* பிரச்சனைகளை நீங்கள் எதிர் கொள்ளும் பொழுது உங்களது கடந்த கால கர்மத்தின் கணக்குகள் (எதிர் மறையான வினைப்பயன்கள்) முடிந்து கொண்டிருக்கின்றது என்று நினையுங்கள்.

* உங்களுக்குள் இருக்கும் சூட்சும அகங்காரத்தை தியாகம் செய்யுங்கள். வரும் பொழுது எதுவும் கொண்டு வரவில்லை, திரும்பும் பொழுதும் எதுவும் கொண்டு செல்ல மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* நீங்கள் உங்களது அனைத்து கவலை களையும் பரம்பிதா பரமாத்மாவிடம் அர்ப்பணம் செய்து விடுங்கள்.

* தினமும் சிறிது நேரமாவது இறைவனை நினைவு செய்யுங்கள். யோகப்பயிற்சியினால் ஏற்படும் மன மற்றும் சரீர மாற்றமானது மன இறுக்கம் மற்றும் கவலைகளிலிருந்து விலக்கி ஆரோக்கியத்தை நல்கும்.

நன்றி ஈகரைகவிஞர் கே இனியவன்



https://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None